பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்த டிரோன்... சுட்டு வீழ்த்திய பி.எஸ்.எப்.வீரர்கள்
இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனை பி.எஸ்.எப்.வீரர்கள் சுட்டுவீழ்த்தினர்.;
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கோடு அருகே பாகிஸ்தானை சேர்ந்த டிரோன் ஒன்று பறந்து வந்துள்ளது. பூஞ்ச் பகுதியில் அந்த டிரோன் பறந்தபோது, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பி.எஸ்.எப். வீரர்கள் அதனை கவனித்தனர். உடனடியாக அந்த டிரோனை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனை பி.எஸ்.எப். வீரர்கள் தேடி வருகின்றனர். இந்திய எல்லைக்குள் டிரோன்கள் நுழைவது குறித்த தகவல் அளித்தால் ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.