வீட்டை உரிமை கொண்டாடிய தொழிலாளிக்கு தர்ம-அடி
வீட்டை உரிமை கொண்டாடிய தொழிலாளிக்கு தர்ம-அடி விழுந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா சென்னராயப்பட்டணா தொழிற்பேட்டை பகுதியில் ஒரு பெண் வசிக்கிறார். அவரது வீட்டுக்குள் புகுந்து ஒரு நபர், அந்த வீடு தனக்கு சொந்தமானது என்று கூறி அப்பெண்ணை வெளியே செல்லும்படி மிரட்டினார். இதுபற்றி அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்த நபரை பிடித்து தர்ம-அடி கொடுத்தனர்.
அப்போது அவர், கஞ்சா போதையில் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டுக்கு உரிமை கொண்டாடி பெண்ணை மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து தகவலின் பேரில் விரைந்து வந்த சென்னராயப்பட்டணா போலீசார்,அந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர், வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளியான பூரன் பிரசாத் என்பது தெரியவந்தது.