எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு இல்லை- ஓவைசி

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கவில்லை எனவும் அழைத்தாலும் சென்றிருக்க மாட்டேன் என ஓவைசி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-15 12:42 GMT

ஐதராபாத்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதனால் ஜூலை 18-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்த முனைப்பு காட்டி வருகின்றன.

இது தொடர்பாக ஆலோசனை நடத்த 22 எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து இருந்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 16 கட்சிகள் கலந்து கொண்டன. இந்தக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என தீர்மானம் எடுக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஒவைசிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தொலைபேசியில் கருத்து தெரிவித்த ஒவைசி, `` ஜனாதிபதி தேர்தல் குறித்து விவாதிக்க மம்தா பானர்ஜி என்னை அழைக்கவில்லை. அவர் என்னை அழைத்திருந்தாலும் நான் பங்கேற்றிருக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியை அவர்கள் அழைத்த காரணத்தினால், நான் சென்றிருக்க மாட்டேன்'' எனக் கூறியிருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்