சிக்கிமில் பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மீட்பு

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ராணுவ வீரர்கள் தங்களுடைய முகாம்களை காலி செய்தனர்.

Update: 2023-12-14 01:41 GMT

image courtesy: ANI

கேங்டாக்,

கிழக்கு சிக்கிமில் பனிப்பொழிவு காரணமாக உயரமான பகுதிகளில் சிக்கித் தவித்த 800-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை இந்திய ராணுவத்தினர் நேற்று மீட்டனர்.

பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக கிழக்கு சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் பெண்கள், வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுற்றுலாப் பயணிகள் பலர் சிக்கித் தவித்தனர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் இந்திய ராணுவத்தின் திரிசக்தி கார்ப்ஸ் படையினர் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வரை மீட்புப்பணி தொடர்ந்தது. பின்னர் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு அவர்களுக்கு தங்குமிடம், சூடான ஆடைகள், மருத்துவ உதவி மற்றும் சூடான உணவு ஆகியவை வழங்கப்பட்டன.

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ராணுவ வீரர்கள் தங்களுடைய முகாம்களை காலி செய்தனர். ராணுவம் அளித்த உடனடி உதவிக்கு சுற்றுலாப் பயணிகள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்