நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி

நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 6 பேர் காயமடைந்தனர்.

Update: 2024-12-23 06:18 GMT

புனே,

மராட்டிய மாநிலம் புனே நகரில் உள்ள கேஸ்னந்த் பாடா பகுதிக்கு அருகே உள்ள சாலை நடைமேடையில் பல தொழிலாளர்கள் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே சென்ற லாரி நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்தவரக்ள் மீது மோதியது. இதில் 2 குழந்தைகள் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்கள் வைபவி பவார் (1), வைபவ் பவார் (2) மற்றும் விஷால் பவார் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "நாங்கள் டிரைவரை கைது செய்துள்ளோம். அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டுள்ளோம்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்