15-18 வயது சிறுவர்களில் 80 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி
15-18 வயது சிறுவர்களில் 80 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் 15 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி 3-ந் தேதி தொடங்கியது. அவர்களில் 5 கோடியே 92 லட்சம் பேருக்கு இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இது அவர்களது மொத்த எண்ணிக்கையில் 80 சதவீதம் ஆகும்.
இந்த தகவலை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். உலகின் மாபெரும் தடுப்பூசிதிட்டத்தை இளைஞர்கள் புதிய உயரத்துக்கு கொண்டு சென்றிருப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.
12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களில் 3 கோடியே 30 லட்சம்பேர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.