வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 6,700 இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பி உள்ளனர் - மத்திய அரசு

வங்காளதேசத்தில் இருந்து இந்திய மாணவர்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Update: 2024-07-25 19:54 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

வங்காளதேசத்தில், அந்நாட்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் கலவரமாக உருவெடுத்தது.

வன்முறை சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த கலவரம் காரணமாக, அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்த வண்ணம் உள்ளனர். அவர்களை மீட்டு அழைத்துவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "வங்காளதேசத்தில் இருந்து இதுவரை 6 ஆயிரத்து 700 இந்திய மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளனர். வங்காளதேசம் நமது அண்டை நாடாகவும், நட்பு நாடாகவும் இருப்பதால் அங்கு விரைவில் இயல்புநிலை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்