கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 2300க்கும் மேற்பட்ட என்ஆர்ஐ பெண்கள் கணவர்களால் கைவிடப்பட்டுள்ளனர்
கடந்த 5 ஆண்டுகளில் 2300க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய பெண்கள் கணவர்களால் கைவிடப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
கடந்த ஐந்தாண்டுகளில் 2300க்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்திய (என்ஆர்ஐ) பெண்கள் கணவர்களால் கைவிடப்பட்டுள்ளனர் என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ராஜ்யசபைவில் ஒரு கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் டிசம்பர் 22 அன்று, "கிடைத்த தகவல்களின்படி, தங்கள் கணவர்களால் கைவிடப்பட்டதாக வெளிநாடு வாழ் இந்திய பெண்களிடமிருந்து சுமார் 2372 புகார்கள் வந்துள்ளன என கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் (ஆம் ஆத்மி) எம்பி ராகவ் சாதாவின் கேள்விக்கு முரளீதரன் பதிலளித்தார்.