"பாஜகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு" - துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ்

பாஜகவை வீழ்த்துவதே எங்களின் ஒரே இலக்கு என்று துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கூறினார்.

Update: 2023-05-15 13:00 GMT

பாட்னா,

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 136 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சி 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது.

ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி வெறும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. இந்த தோல்வியால் பா.ஜனதாவுக்கு தென்இந்தியாவின் நுழைவு வாயிலாக விளங்கிய கர்நாடகத்தை அக்கட்சி இழந்துள்ளது. மேலும் தென்இந்திய மாநிலங்களில் ஒன்றில் கூட பா.ஜனதா ஆட்சி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நி்லையில், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி குறித்து பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பாஜகவை வீழ்த்துவது எளிது என்பது தான் கர்நாடக தேர்தல் முடிவு நமக்கு அளித்திருக்கும் செய்தி. அதனை வலியுறுத்திதான் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தான் முதல்-மந்திரி நிதீஷ் குமார், லாலு ஜி மற்றும் நாங்கள் அனைவரும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். பிரதமராக, முதல்வராக வருவதல்ல எங்களது நோக்கம். பா.ஜ.கவை வீழ்த்துவதே எங்களின் ஒரே நோக்கம், இலக்கு" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்