கர்நாடக மக்களின் நலனுக்காக எங்கள் கைகள் எப்போதும் இணைந்திருக்கும் - சித்தராமையா

கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும் துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

Update: 2023-05-18 08:54 GMT

பெங்களூரு,

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.கர்நாடாகாவில் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இருவரையும் கட்சி மேலிடம் அழைத்து பேசியது 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில், இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும் துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல் மந்திரி அறிவிப்பு வெளியான நிலையில் கர்நாடக மக்களின் நலனுக்காக எங்கள் கைகள் எப்போதும் இணைந்திருக்கும் என சித்தராமையா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் ,

கர்நாடக மக்களின் நலனுக்காக எங்கள் கைகள் எப்போதும் இணைந்திருக்கும் . மக்களுக்கு வெளிப்படையான, ஊழல் இல்லாத நிர்வாகத்தை வழங்குவதோடு, எங்கள் அனைத்து உத்தரவாதங்களையும் நிறைவேற்ற காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பமாக செயல்படும். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்