'அரசியலில் நான் சன்னியாசி அல்ல' முதல் மந்திரி பதவி குறித்து டிகே சிவக்குமார் பரபரப்பு பேட்டி

முதல்-மந்திரி பதவி விஷயத்தில் அரசியலில் நான் சன்னியாசி அல்ல என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

Update: 2022-07-18 15:16 GMT

பெங்களூரு,

முதல்-மந்திரி பதவி விஷயத்தில் அரசியலில் நான் சன்னியாசி அல்ல என்று மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்கா போட்டியில் உள்ளார். அவர் நன்கு படித்தவர். அனைத்து தரப்பு மக்களையும் கவனத்தில் கொண்டு செயல்படுவார். நாட்டில் ஜனநாயகத்தை காக்கவும், பொருளாதாரத்தை வளர்க்கவும் , மக்களின் குரலை காக்கவும் முயற்சி செய்வார். பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு மத்திய அரசின் கைப்பாவையாக இருப்பாரா? என்பது குறித்து என்னால் கருத்து கூற முடியாது. ஆனால் இது அரசியல் போராட்டம். அடுத்து என்ன நடக்கிறது என்பது பார்க்கலாம்.

அரசியலில் நான் சன்னியாசி அல்ல. எனக்கு வேண்டியவர்களிடம் நான் முதல்-மந்திரி பதவி குறித்து பேசியுள்ளேன். ஆனால் மக்கள் ஆதரிக்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும். நாங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக்கொள்வோம். அதுபற்றி ஈசுவரப்பாவுக்கு என்ன பிரச்சினை?. பால் பொருட்கள் மீது மத்திய அரசு வரி விதித்துள்ளது. இது சாமானிய மக்களுக்கு மத்திய அரசு அளித்த பரிசு.சப்-இன்ஸ்பெக்டர் நியமன தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அனைவரிடமும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும். இதன் மூலம் அனைத்து உண்மைகளும் வெளிவரும்" இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்