ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த முதியவரிடம் ரூ.50 ஆயிரம் 'அபேஸ்'
சிவமொக்காவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த முதியவரிடம் ரூ.50 ஆயிரத்தை ‘அபேஸ்’ செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த முதியவரிடம் ரூ.50 ஆயிரத்தை 'அபேஸ்' செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஆன்லைன் ஆர்டர்
சிவமொக்கா டவுனில் 60 வயது முதியவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் முதியவர் தனது வீட்டுக்கு தேவையான பொருளை வாங்குவதற்காக ஆன்லைனில் தேடினார். அப்போது ஆன்லைனில் குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு செல்போன் கொடுப்பதாக விளம்பரம் இருந்தது. அதனை பார்த்த முதியவர் குறைந்த விலைக்கு செல்போன் இருந்ததால் அதை வாங்குவற்கு ஆசை பட்டார்.
மேலும் அந்த விளம்பரத்தின் லிங்கை கிளிக் செய்தார். அதில் தனது விவரங்கள் மற்றும் வங்கி கணக்குகளை பதிவு செய்ய வேண்டும் என இருந்தது. அதன்படி முதியவர் வங்கி கணக்கு விவரம் மற்றும் வீட்டின் முகவரி ஆகியவற்றை அதில் பதிவு செய்தார். பின்னர் இதுகுறித்து தனது மகனிடம் முதியவர் கூறியுள்ளார்.
ரூ.50 ஆயிரம் 'அபேஸ்'
அதற்கு அவரது மகன் இது பொய்யான விளம்பரம் ஆகும். பணம் பறிக்கும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாக கூறினார். ஆனால் அதனை முதியவர் நம்பவில்லை. இதையடுத்து முதியவர் வங்கிக்கு சென்று கணக்கு விவரங்களை சரிபார்த்தார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்ததில் மர்மநபர்கள் ரூ.50 ஆயிரத்தை அபேஸ் செய்துள்ளனர்.
இதனால் முதியவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முதியவர் சிவமொக்கா சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்்தார். அதன் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.