ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிப்பு

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-09-03 07:06 GMT

சென்னை,

சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் செல்வதை நேரில் பார்ப்பதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கூடி இருந்தனர். சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கைகளில் குடைகளை பிடித்தபடி அனைவரும் காத்திருந்தனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் இறுதி கட்டப்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 24 மணி நேர கவுண்ட்டவுனை முடித்து கொண்டு நேற்று பகல் 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட 'ஆதித்யா எல்-1' விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து 'ஆதித்யா எல்1' விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயரம் முதல்முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 245*22, 459 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்.5ல் மேற்கொள்ளப்படும் என்றும் ஆதித்யா எல்-1 விண்கலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்