அடுத்த வாரம் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு
வரும் 12ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட்டுள்ளது.
டெல்லி,
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆளும்கட்சியாக இருந்த பாஜக படுதோல்வியடைந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றியை தொடர்ந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன.
அந்த வகையில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்காக காங்கிரஸ், ஆம் ஆத்மி, இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்தித்தார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 12-ம் தேதி பாட்னாவில் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், அடுத்த வாரம் நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் அமெரிக்காவில் உள்ளதால் அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்படுள்ளது.
அதேவேளை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அந்த தினத்தில் வேறு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வரும் 12-ம் தேதி நடைபெறவிருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் தள்ளிவைக்கபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.