ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசனை

ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.;

Update: 2022-06-20 18:39 GMT

கொல்கத்தா,

ஜனாதிபதி தேர்தலுக்கு தங்களின் பொது வேட்பாளரை தேர்வு செய்யும் முனைப்பில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன.

அதற்காக ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா மற்றும் மேற்கு வங்காள முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி ஆகியோருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டபோதும், அதை அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்காவை நிறுத்த ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது பெயரை தாங்கள் முன்மொழிந்துள்ளதாகவும், தற்போதைக்கு 3, 4 எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்