மணிப்பூர் சென்று வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 'இந்தியா' கூட்டணி தலைவர்களிடம் விளக்கம்

மணிப்பூர் சென்று வந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்களிடம் விளக்கம் அளித்தனர்.

Update: 2023-07-31 19:15 GMT

புதுடெல்லி,

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அங்கு சென்று வந்துள்ளனர்.

அந்த எம்.பி.க்கள், டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று சந்தித்தனர். அவர்கள் மணிப்பூர் சூழ்நிலை குறித்து தங்களின் 'இந்தியா' கூட்டணி கட்சித் தலைவர்களிடம் விளக்கிக் கூறினர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சித் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்