பெங்களூருவில் வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டும் வைக்க அனுமதி?- மாநகராட்சி தலைமை கமிஷனர் பதில்

பெங்களூருவில் வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டும் வைக்க அனுமதியா என்பதற்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் பதில் அளித்துள்ளார்.

Update: 2022-08-06 16:24 GMT

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனா் துஷார் கிரிநாத் பெங்களூருவில்  நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-பெங்களூரு கே.ஆர்.மார்க்கெட்டில் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வந்தது. அதன் அடிப்படையில் நான் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அங்கு குப்பைகள், கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. ஆனால் விரிசல் ஏற்படவில்லை. அந்த கழிவுகள் அகற்றப்படும். அந்த பகுதி தூய்மையாக்கப்படும். கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியின்போது ஒரு வார்டுக்கு ஒரு சிலை மட்டுமே வைக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த ஆண்டும் அதே விதிமுறைப்படி வார்டுக்கு ஒரு விநாயகர் சிலை மட்டும் வைக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும். இதுகுறித்து அரசு ஆலோசனை கூட்டம் நடத்தி இறுதி முடிவு எடுக்கும். ஆனால் ரசாயனத்தால் செய்யப்படும் விநாயகர் சிலைகளை பயன்படுத்த கூடாது. அதற்கு அரசு அனுமதி அளிக்காது. சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதான விவகாரம் குறித்து ஆவணங்கள் அடிப்படையில் மாநகராட்சி முடிவு எடுக்கும்.

இவ்வாறு துஷார் கிரிநாத் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்