விவசாயிகள் எதிர்ப்பு: வெங்காய ஏற்றுமதி வரி, காலத்துக்கேற்ப எடுத்த முடிவு - மத்திய அரசு விளக்கம்

உள்நாட்டு வரத்தை அதிகரித்து, விலையை குறைப்பதற்காக காலத்திற்கேற்ப எடுத்த முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-21 19:19 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவித்து வருகிறது. வெங்காய ஏற்றுமதியை தடுக்க வெங்காயம் மீது 40 சதவீத ஏற்றுமதி வரி விதித்துள்ளது.

40 சதவீத ஏற்றுமதி வரியை எதிர்த்து, மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாபாரிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார செயலாளர் ரோகித்குமார் சிங் கூறியதாவது:-

வெங்காயம் மீது 40 சதவீத ஏற்றுமதி வரி விதித்தது, அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல.

உள்நாட்டு வரத்தை அதிகரித்து, விலையை குறைப்பதற்காக காலத்திற்கேற்ப எடுத்த முடிவு.

நிலைமை சீரடையும்வரை, தனது கையிருப்பில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு விடுவிக்கும். கடந்த 2 நாட்களில், டெல்லியில் கிலோ ரூ.25 என்ற மானிய விலையில் 2 ஆயிரத்து 500 டன் வெங்காயம் விற்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்