ராகுல் யாத்திரையின் ஓராண்டு: நாடு முழுவதும் நாளை காங்கிரஸ் பாதயாத்திரை

‘ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது.;

Update: 2023-09-06 03:16 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் தேதி கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கி, கடந்த ஜனவரி 30-ந் தேதி ஸ்ரீநகரில் அதை நிறைவு செய்தார்.

இந்த யாத்திரையின் ஓராண்டு நிறைவையொட்டி, நாடு முழுவதும் பாதயாத்திரை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

டெல்லியில் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுடன் செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், 'ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது.

அதை நினைவுகூரும்விதமாக, 7-ந் தேதி (நாளை) மாலை 5 மணி முதல் 6 மணி வரை, மாநில தலைவர்கள், பொறுப்பாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் தலைமையில் நாட்டின் 722 மாவட்டங்களில் இந்திய ஒற்றுமை பாதயாத்திரை நடைபெறும்.

வெறுப்பு சந்தையில் அன்பை பரப்பும் கடையை அமைக்கும் விதமாகவும் இந்த பாதயாத்திரை நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்