ஒரு தோசை ஆயிரம் ரூபாய் - வாடிக்கையாளர்களை கவரும் தங்க தோசை..!
கர்நாடகாவில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் தங்க இழை பூசப்பட்ட தோசை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.;
தும்கூர்,
கர்நாடகாவில் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் தங்க இழை பூசப்பட்ட தோசை வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.
தும்கூர் நகரில் ரெயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஓட்டலில் ஒரு தோசை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்ன அந்த தோசையில் இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு, அது தங்க தோசை என பதிலளிக்கிறார் கடையின் உரிமையாளர்.
மசால் தோசை சுடும்போதே அதன் மேல் 24 காரட் தங்கம் முலாம் பூசப்பட்ட மெல்லிய தாள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தினமும் 20 தங்க மசால் தோசைகள் விற்பனை செய்யப்படுவதாக கூறும் ஓட்டல் நிர்வாகம், தங்க தோசையை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.