ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு வைத்த பரிந்துரைகள் என்னென்ன?
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு இன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலை குழு அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி அமைக்கப்பட்ட குழு இன்று தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
- ஒரே நேரத்தில், மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை நடத்துவது சாத்தியம்
- ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்தும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்.
- அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மாநில அரசின் அனுமதி தேவை இல்லை.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கு 50 சதவீத மாநிலங்களின் சட்ட ஒப்புதல் அவசியம்
- தொங்கு சட்ட சபை, ஆட்சி கவிழ்ந்தால் எஞ்சிய பதவி காலத்திற்கு இடைத்தேர்தல் நடத்தலாம்.
- ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்டத்தில் திருத்தங்களை செய்ய வேண்டும்.
- மக்களவை,சட்டப்பேரவை தேர்தல் முடிந்த 100 நாட்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம்.
இதுபோன்ற பல்வேறு அம்சங்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.