மணிப்பூரில் இருதரப்பு மோதலில் ஒருவர் பலி - 3 பேர் காயம்

மணிப்பூரின் மேற்கு எல்லையில் இருதரப்பினர் இடையே நடந்த பயங்கர மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மூவர் காயமடைந்தனர்.

Update: 2024-04-28 19:05 GMT

கோப்புப்படம்

இம்பால்,

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையேயான இனக்கலவரம் கிட்டத்தட்ட ஓர் ஆண்டாக தொடர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் மணிப்பூரின் பிஷ்ணுபூர் மாவட்டம் நரன்செய்னா நகரில் மத்திய ரிசர்வ் போலீஸ்படை (சி.ஆர்.பி.எப்.) வீரர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் உள்ள காங்சுப் என்ற கிராமத்தில் மெய்தி மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இருதரப்பையும் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்