ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள மௌங்கிரி, கோர் கலி பகுதியல் இருந்து உதம்பூரை நோக்கி இன்று காலை பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 36 பேர் பயணித்தனர்.
இந்தநிலையில், மலைப்பாங்கான மன்சார் மோர் என்ற பகுதியில் உள்ள வளைவில் திரும்பும்போது டிரைவரின் கட்டுப்பாடடை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், ராணுவம், உள்ளூர் மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார். மேலும் 67 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உதம்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.