விமானத்தில் புகைப்பிடித்தவர் மீது வழக்குப்பதிவு..!
விமானத்தில் புகைப்பிடித்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாகர்,
லண்டனிலிருந்து மும்பைக்கு ஏர் இந்திய விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் தடையை மீறி ரமாகாந்த் என்ற நபர் விமான கழிப்பறையில் புகைப் பிடித்ததாக பயணிகள் புகார் அளித்தனர். பயணிகள் புகாரின் அடைப்படையில் ரமாகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் குடிபோதையில் இருந்த ரமாகாந்த் விமானத்தின் கதவை திறக்க முயன்றதாக விமான ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். அமெரிக்க குடிமகனான ரமாகாந்த் (37) மீது சாகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.