தேர்தல் ஆணையர் நியமனத்தில் புதிய முறை: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

பிரதமர் உள்ளிட்டோர் கொண்ட குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.;

Update: 2023-03-02 05:51 GMT

புதுடெல்லி,

தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் புதிய முறையை பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவர், தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழு மூலமே தேர்தல் ஆணையரை நியமனம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு பிறப்பித்துள்ளது. தேர்தல் ஆணையரை நியமனம் செய்யும் விவகாரத்தில் சீர்திருத்தம் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பை அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்