ஊழலின் சுரங்கமாக ஜார்க்கண்ட் மாறிவிட்டது: 3 காங்.எம்.எல்.ஏக்கள் கைது குறித்து பாஜக விமர்சனம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஊழல் வாதிகளாக இருப்பதாகவும் பாஜக சாடியுள்ளது.;

Update: 2022-07-31 14:07 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹிமந்த் சோரன் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். ஜார்க்கண்ட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் கட்டுக்கட்டாக பணத்துடன் மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா தேசிய நெடுஞ்சாலையில் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், பின்னர் கைது செய்தனர்.

இதற்கு மத்தியில், ஜார்க்கண்ட்டில் ஆளும் கூட்டணி அரசை கவிழ்க்கவே இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக சாடிய காங்கிரஸ், கைதான 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்தது. இந்த நிலையில், காங்கிரசை கடுமையாக சாடியுள்ள பாஜக, ஜார்க்கண்ட் ஊழலில் சுரங்கமாக மாறிவிட்டது" என்று தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஊழல் வாதிகளாக இருப்பதாகவும் பாஜக சாடியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்