முன்விரோதத்தில் தகராறு: முதியவர் கத்தியால் குத்திக்கொலை

முன்விரோத தகராறில் முதியவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-07-10 21:06 GMT

கோலார்: கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா தேக்கல் அருகே சேத்தஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வசந்தகுமார் (வயது 60). விவசாயி. இவருடைய குடும்பத்துக்கும் அதேப்பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்றும் இரு குடும்பங்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பாபு மற்றும் அவரது உறவினர்கள் வசந்தகுமாரை சரமாரியாக தாக்கினார்கள். அப்போது பாபு தான் வைத்திருந்த கத்தியால் வசந்தகுமாரை குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாலூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு மற்றும் அவரது உறவினர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்