கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது; 1½ கிலோ கஞ்சா பறிமுதல்

கார்வார் ரெயில் நிலையம் அருகே கஞ்சா விற்ற ஒடிசா வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2022-09-26 05:15 GMT

கார்வார்;

உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் ரெயில்வே நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக குமட்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். பின்னா் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்துள்ளார். அவரை போலீசார் அழைத்து விசாரித்தனர். இதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்த பையை வாங்கி சோதனை செய்தனர்.

அந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் என்பதும், அவர் கல்லூரி மாணவர்களுக்கும், கம்ப்யூட்டர் என்ஜினீயர்களுக்கும் கஞ்சா விற்று வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்