ஒடிசா ரெயில் விபத்து: விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் - விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்
புவனேஸ்வருக்கு விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.;
புதுடெல்லி,
ஒடிசா ரெயில் விபத்தை தொடர்ந்து, ஒடிசாவின் புவனேஸ்வர் நகருக்கும், அங்கிருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று விமான போக்குவரத்து நிறுவனங்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களும் கண்காணித்து, தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும். புவனேஸ்வர் போல ஒடிசா மாநிலத்தின் பிற விமான நிலையங்களுக்கும் விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம். அதேபோல, ரெயில் விபத்தை தொடர்ந்து விமான டிக்கெட் ரத்து அல்லது பயண தேதியை மாற்றி அமைத்ததற்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளது.