ஒடிசா ரெயில் விபத்து : காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பீகார் துணை முதல் மந்திரி

விபத்துக்கு காரணமானவர்கள் மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-06-04 10:21 GMT

பாலசோர்,

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீகார் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ,

இது பெரிய விபத்து. அலட்சியத்தால் இது நடந்துள்ளது. பாதுகாப்பே தங்களின் முன்னுரிமை என்று ரயில்வே கூறுகிறது, ஆனால் இவ்வளவு பெரிய விபத்துக்குப் பிறகும், பொறுப்பு இன்னும் சரி செய்யப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்