ஒடிசா- புவனேஸ்வரில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை அடையாளம் கண்டறியும் பணியில் தமிழக குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.;
புவனேஸ்வர்,
ஒடிசா ரெயில் விபத்தில் காயம் அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்தில் சிக்கியுள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்டு சென்னை அழைத்து வர முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புறப்பட்டு சென்ற அதிகாரிகள் குழுவினர் அம்மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து தமிழக பயணிகள் குறித்து விவரங்களை கேட்டறிந்து அவர்களை பற்றி தகவல்களை சேகரித்து உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சென்னை உள்ளிட்ட மற்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் எத்தனை பேர் விபத்தில் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும் உதவிகள் செய்யவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். ரெயில் விபத்தில் சிக்கிய தமிழர்களை அடையாளம் கண்டறியும் பணியில் தமிழக குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.