ஒடிசா: முன்னாள் ஆக்கி வீரர் திலீப் குமார் டிர்கி பின்னடைவு
ஒடிசா மாநிலம் சுந்தர்கர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் ஆக்கி வீரர் திலீப் குமார் டிர்கி பின்னடைவை சந்தித்துள்ளார்.;
புவனேஸ்வர்,
நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஒடிசா மாநிலம் சுந்தர்கர் தொகுதியில் பிஜு ஜனதா தளம் சார்பில் களம் கண்ட முன்னாள் ஆக்கி வீரரான திலீப் குமார் டிர்கி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரான ஜுவல் ஓரமை விட 80000 வாக்குகள் பின்னடைவை சந்தித்துள்ளார்.