ஒடிசா: இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு; 28 பேர் பாதிப்பு

ஒடிசாவில் ஆளுங்கட்சி தலைவரின் மகனது இறால் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 28 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.;

Update: 2022-09-29 01:28 GMT



புவனேஸ்வர்,


ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்.பி. மற்றும் மாவட்ட தலைவர் ரபீந்திர ஜெனாவின் மகன் பிரதீக் ஜெனா. இவர் ஹைலேண்ட் அக்ரோபுட் என்ற பெயரில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கந்தபாதா மாவட்டத்தின் கடபகனகா கிராமத்தில் அமைந்த தொழிற்சாலையில் நேற்றிரவு திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனை சுவாசித்த தொழிலாளர்களில் 28 பேருக்கு சுவாச கோளாறுகள், தொண்டை மற்றும் மூக்கு ஆகியவற்றில் எரிச்சல் ஆகியவை ஏற்பட்டு உள்ளன.

அவர்களில் 9 பேர் அதிக அளவில் அம்மோனியா வாயுவை சுவாசித்து உள்ளனர். இதனால், தீவிர சிகிச்சையும், மற்ற 19 பேரும் உள்ளூர் சமூக சுகாதார மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில், பால்கன் மரைன் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தை தொழிலாளர்கள் உள்பட 90 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதனை தொடர்ந்து, அந்த ஆலையை அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். கவனக்குறைவுடன் செயல்பட்டதற்காக வழக்கு ஒன்றும் பதிவானது.

Tags:    

மேலும் செய்திகள்