தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஏக்நாத் ஷிண்டே சந்திப்பு

தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவலுடன் மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத்ஷிண்டே சந்தித்து பேசினார்.;

Update: 2022-09-03 13:21 GMT

மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் முக்கிய தலைவர்களின் வீடுகளில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளை, மற்ற தலைவர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இதேபோல அரசியல் தலைவர்களும் தொண்டர்கள், பொது மக்கள் சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதியை தரிசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மும்பையில் உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவின் வர்ஷா பங்களாவுக்கு சென்றார். அவரை ஏக்நாத் ஷிண்டே பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் அஜித் தோவல் முதல்-மந்திரி வீட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை தரிசனம் செய்தார். இதேபோல அஜித் தோவல் மரியாதை நிமித்தமாக மும்பையில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியையும் சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்