உப்பள்ளியில் திரண்ட வடமாநில இளைஞர்கள்

ரெயில்வே பணிக்கு உடல் தகுதி தேர்வுக்கு உப்பள்ளியில் வடமாநில இளைஞர்கள் திரண்டனர்.

Update: 2023-01-30 20:42 GMT

உப்பள்ளி;-

உடல் தகுதி தேர்வு

இந்தியன் ரெயில்வே சார்பில் ஆர்.ஆர்.சி. குரூப்-டி பணிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு எழுத்து தேர்வு நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு உப்பள்ளியில் 30-ந்தேதி (அதாவது நேற்று) நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உப்பள்ளி டவுன் விஜயாப்புரா ரோட்டில் உள்ள தென்மேற்கு ரெயில்வே விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உடல் தகுதி தேர்வில் கலந்துகொள்வதற்காக நேற்று உப்பள்ளியில் திரண்டனர். இவர்கள் அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதில், பெரும்பாலாேனார் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் தென்மாநிலங்களை சேர்ந்த ஒருவர் கூட இதில் பங்கேற்கவில்லை.

ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்

நேற்று காலை 8 மணி முதலே தென்மேற்கு ரெயில்வே விளையாட்டு மைதானம் முன்பு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காத்து கிடந்தனர். பின்னர் காலை 9 மணிக்கு பிறகு அவர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சோதனைக்கு பிறகு மைதானத்துக்குள் சென்று உடல் தகுதி தேர்வில் கலந்துகொண்டனர்.

ரெயில்வே மைதானம் அருகே ஆயிரக்கணக்கானோர் திரண்டதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய முடியாமல் திணறினர்.

பொதுமக்கள் அதிர்ச்சி

இந்திய ரெயில்வே பணிக்காக வடஇந்திய இளைஞர்களை மட்டுமே மத்திய அரசு தேர்வு செய்வதாகவும், தென்இந்திய இளைஞர்களை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. தற்போது ரெயில்வே பணிக்கு வடஇந்திய இளைஞர்களை மட்டும் தேர்வு செய்ய உப்பள்ளியில் உடல் தகுதி தேர்வு நடத்தியது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்