மாடால் விருபாக்ஷப்பாவுக்கு பா.ஜனதாவினர் யாரும் ஆதரவாக இல்லை

ஊழல் விவகாரத்தில் சிக்கியுள்ள மாடால் விருபாக்ஷப்பாவுக்கு பா.ஜனதாவினர் யாரும் ஆதரவாக இல்லை என மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

Update: 2023-03-07 04:30 GMT

சிக்கமகளூரு-

சித்ரதுர்காவில் மந்திரி பி.சி.பட்டீல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாகவது:-

மாடால் விருபாக்ஷப்பா எம்.எல்.ஏ. வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதுதொடர்பாக பா.ஜனதாவினர் யாரும், மாடால் விருபாக்ஷப்பாவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக லோக் அயுக்தா போலீசார் சுதந்திரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியினருக்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் மாடால் விருபாக்ஷப்பா மீது தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.

எனஎனகாங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்த 17 பேருக்கும் பா.ஜனதா உரிய மதிப்பு அளித்து வருகிறது. அவர்கள் பா.ஜனதாவில் இருந்து விலக மாட்டார்கள். மந்திரி நாராயணகவுடா பா.ஜனதா மீது அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவரும் பா.ஜனதாவை விட்டு விலகும் நிலையில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்