பாக்கெட்டும் இல்லை, பர்ஸும் இல்லை - பணச் சலவை செய்தார்கள் என குற்றச்சாட்டு - ப.சிதம்பரம் கிண்டல்

பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணப்பரிமாற்றம் செய்தார்கள் என்று குற்றச்சாட்டுபடுகிறது என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.;

Update: 2022-06-02 09:09 GMT

சென்னை,

'நேஷனல் ஹெரால்டு' பரிவர்த்தனை முறைகேடு தொடர்பான வழக்கில்ஆஜராகும்படி, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் அவரது மகன் ராகுல் ஆகியோருக்கு, அமலாக்கத்துறை மீண்டும் 'சம்மன்' அனுப்பி உள்ள நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில்,

பணப் பரிமாற்றமே இல்லை, ஆனால் பணச் சலவை செய்தார்கள் என்று குற்றச்சாட்டு. தண்ணீரே இல்லாத குளத்தில் நீ அத்துமீறி நுழைந்து நீச்சல் செய்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? பாக்கெட்டும் இல்லை, பர்ஸும் இல்லை, ஆனால் நீ பிக்பாக்கெட் அடித்தாய் என்று சொன்னால் எப்படியிருக்கும்? என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்