வலிமையாகவும் உண்மையாகவும் இருந்தால், அடக்குமுறைக்கு பயப்படத் தேவையில்லை - சரத்பவார்

மத்திய விசாரணை அமைப்புகளை கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படக் கூடாது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

Update: 2022-06-05 13:25 GMT

புனே,

மத்திய விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், புனேவில் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், விசாரணை அமைப்புகளை எதிர்கொள்ளும் போது தங்களது அரசியல் எதிரிகள் சரணடைவார்கள் என்ற தவறான கருத்தை பாஜக கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஆனால் அது போன்ற தந்திரங்களுக்கு பயப்பட தேவையில்லை என்றும் குறிப்பிட்ட அவர், நாம் வலிமையாகவும் உண்மையாகவும் இருந்தால், அடக்குமுறைக்கு பயப்படத் தேவையில்லை என்றும் நாம் அவர்களை எதிர்த்து நிற்க வேண்டும் என்றும் கூறினார்.

சரத் ​​பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் ஆகியோர் மத்திய அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்குகளின் கீழ் தற்போது சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்