காங்கிரஸ் புகார் எதிரொலி: கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது - மறைமுக வரிகள் வாரியம் விளக்கம்

காங்கிரஸ் புகார் எதிரொலியாக கங்கை நதி நீருக்கு ஜி.எஸ்.டி. கிடையாது என்று மறைமுக வரிகள் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2023-10-12 23:21 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

கங்கை நதி நீரை மக்கள் பூஜைக்கான புனித நீராக பயன்படுத்துகிறார்கள். இந்த புனித நீருக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. விதித்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே புகார் கூறியிருந்தார். இது கொள்ளை மற்றும் பாசாங்குத்தனத்தின் உச்சம் எனவும் அவர் சாடியிருந்தார்.

காங்கிரஸ் தலைவரின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய மறைமுக வரிகள் வாரியம் விளக்கம் அளித்து இருக்கிறது.

இது தொடர்பாக வாரியத்தின் எக்ஸ் தளத்தில், 'நாடு முழுவதும் ஏராளமான குடும்பத்தினர் கங்கை நதி நீரை பூஜையில் பயன்படுத்துகின்றனர். பூஜை பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்ததில் இருந்தே இந்த விலக்கு இருக்கிறது' என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பூஜை பொருட்களுக்கு வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 14 மற்றும் 15-வது கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்பட்டதாகவும் மத்திய மறைமுக வரிகள் வாரியம் தனது விளக்கத்தில் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்