மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்

மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை என்று நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-03-27 12:17 GMT

புதுடெல்லி,

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட்ட நிலையில் ஜிஎஸ்டி வரியால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கும் என ஜிஎஸ்டி சட்டம் உறுதி செய்கிறது.

அதன்படி, ஜிஎஸ்டி வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கு இழப்பீடு தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில், ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்குவதில் தாமதமாகுவதாக பல மாநில அரசுகள் மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அவர் கூறுகையில்,

2020-21 நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு 1 லட்சத்து 30 ஆயிரத்து 988 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை 2022-23 நிதியாண்டில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை 1 லட்சத்து 49 ஆயிரத்து 168 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவையில் இல்லை' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்