அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சிபிஐ காவல்

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐயால் நேற்றிரவு முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-06-26 14:27 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த மக்களவை தேர்தலின் போது ஜாமீனில் வெளியே வந்தார். ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் மற்றும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்காக தேர்தல் பிரசாரம் செய்தார்.

பின்னர் சிறைக்கு திரும்பிய நிலையில் ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 3 நாட்கள் சிபிஐ காவல் அளித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ தரப்பில் 5 நாள் கேட்கப்பட்ட நிலையில் 3 நாள் காவல் அளித்து நீதிபதி அமிதாப் ராவத் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்