கற்பழிப்பு குற்றவாளிக்கு முன்ஜாமீன் கிடையாது உத்தரபிரதேச சட்டசபையில் புதிய மசோதா நிறைவேறியது
உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.
லக்னோ,
உத்தரபிரதேச சட்டசபையில், குற்றவியல் நடைமுறை சட்ட திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. போக்சோ வழக்குகள் மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் அளிக்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மசோதா மீது பேசிய உத்தரபிரதேச சட்டசபை விவகார மந்திரி சுரேஷ்குமார் கன்னா, ''இதன்மூலம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதாரங்களை அழிப்பதற்கான வாய்ப்பு குைறயும். பாதிக்கப்பட்ட பெண்ணையும், சாட்சிகளையும் அச்சுறுத்தும் வாய்ப்பும் குறையும்'' என்று கூறினார்.
இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது.
பொது மற்றும் தனியார் சொத்துகளை சேதப்படுத்துபவர்களிடம் இருந்து இழப்பீடு வசூலிக்கும் திருத்த மசோதாவும் நேற்று நிறைவேற்றப்பட்டது. இழப்பீடு கோருவதற்கான காலஅவகாசத்தை 3 மாதங்களில் இருந்து 3 ஆண்டுகளாக உயர்த்த இம்மசோதா வகை செய்கிறது. கலவரத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வழி வகுக்கிறது.