எந்த காலத்திலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி கிடையாது

எந்த காலத்திலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Update: 2023-03-29 05:00 GMT

சிக்கமகளூரு-

எந்த காலத்திலும் ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி கிடையாது என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா எம்.எல்.ஏ. கைது

பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று சிக்கமகளூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தாவணகெரே மாவட்டம் ெசன்னகிரி தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. மாடால் விருபாக்ஷப்பாவை ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் லோக் அயுக்தா போலீசார் கைது செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர். மாடால் விருபாக்ஷப்பாவுக்கு சுப்ரீம் கோர்ட்டிலும் ஜாமீன் கிடைக்கவில்லை. யார் குற்றம் செய்தாலும் அவர்கள் சட்டபடி தண்டிக்கப்படுவார்கள். அது பாரதிய ஜனதா கட்சிக்காரர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. சட்டம் தனது கடமையை செய்யும். மாடால் விருபாக்ஷப்பா வழக்கில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை. ஆனால் சட்டத்தை மதிக்காமல் காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்தார் அலட்சியமாக இருந்தது. ஆனால் அதற்காகத்தான் தற்போது அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

கூட்டணி கிடையாது

எந்த காலத்திலும் ஜனதாதளம் (எஸ்) கட்சியிடம் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம். எங்களுக்கு முதல் அரசியல் எதிரி ஜனதாதளம் (எஸ்) என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் நாங்கள் யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. ஆனால் எனக்கு எதிராக போட்டியிட்ட ஜனதா தளம் (எஸ்) கட்சி வேட்பாளர் 32 ஆயிரம் வாக்குகள் வாங்கி இருந்தார்.

எங்களுக்கு ஆதரவாக இருந்திருந்தால் எப்படி அவ்வளவு வாங்க முடியும். வருணா தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சித்தராமையா போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜனதா வேட்பாளர் யார் என்பதை கட்சியின் மேலிடம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்