எதிர்கட்சிகளை ஒற்றிணைக்கும் வகையில் இன்று மம்தா பானர்ஜியை சந்திக்கிறார் நிதிஷ் குமார்
எதிர்கட்சிகளை ஒற்றிணைக்கும் வகையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை நிதிஷ் குமார் இன்று சந்திக்கிறார்
பாட்னா,
2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தீவிரம் காட்டி வருகிறார். காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பா.ஜ.க.வை 100 தொகுதிகளுக்குள் கட்டுப்படுத்தி விடலாம் என அவர் கூறியிருந்தார்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத், தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை நிதிஷ் குமார் தனித்தனியாகச் சந்தித்துப் பேசினார்.
அதே போல் கொல்கத்தா முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கடந்த 2 மாதங்களாக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்களை சந்தித்து 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் இன்று கொல்கத்தா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு அவர் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.