'இந்தியா' கூட்டணியின் அங்கமாக நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி தொடர்வார்கள் - ஜெய்ராம் ரமேஷ் நம்பிக்கை

மம்தா பானர்ஜி கூறுவதைப் போல, பா.ஜ.க.வை தோற்கடிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கம் என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.;

Update: 2024-01-28 01:16 GMT

புதுடெல்லி,

'இந்தியா' கூட்டணியின் அங்கமாக பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரும், மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், தேசிய பிரச்சினைகளே இந்தியா கூட்டணியின் முன்னுரிமை என்று குறிப்பிட்டார். பா.ஜ.க.வை தோற்கடிப்பதே தங்கள் நோக்கம் என்று மம்தா பானர்ஜி கூறுவதைப் போல, அதுவே காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் நோக்கம் என்று அவர் கூறினார்.

மேற்கு வங்கத்தில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டால் தாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்று அவர் தெரிவித்தார். இதனிடையே பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், நிதிஷ் குமாருடன் பேச காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பல முறை முயற்சி செய்ததாகவும், ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்