அரசியல் சூழல் மாறினால் நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பார் - பிரசாந்த் கிஷோர்

அரசியல் சூழல் மாறினால் நிதிஷ்குமார் பா.ஜனதாவுடன் மீண்டும் கைகோர்ப்பார் என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-11-24 22:49 GMT

கோப்புப்படம்

பாட்னா,

பீகாரில் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் அரசு அமைத்துள்ளார், முதல்-மந்திரி நிதிஷ் குமார்.

ஆனால் மாநிலத்தில் அரசியல் சூழல் மாறினால் பா.ஜனதாவுடன் மீண்டும் அவர் கைகோர்ப்பார் என பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்து உள்ளார்.

பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய போதும், ஐக்கிய ஜனதாதளத்தின் எம்.பி.யான ஹரிவன்ஷ், மாநிலங்களவை துணைத்தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள பிரசாந்த் கிஷோர், பா.ஜனதா கூட்டணியில் நிதிஷ்குமார் மீண்டும் சேர்வதற்கு ஹரிவன்ஷ்தான் வழிவகுத்து கொடுப்பார் என்றும் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்