3 மாதங்களுக்கு ஒருமுறை பிரதமர் கனவு காண்கிறார், நிதிஷ்குமார் - அமித்ஷா

3 மாதங்களுக்கு ஒருமுறை பிரதமர் கனவு காண்கிறார், நிதிஷ்குமார் என்று அமித்ஷா கூறினார்.

Update: 2023-02-25 18:52 GMT

பீகாரின் வால்மீகி நகரில் நேற்று நடந்த பிரமாண்ட பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது முதல்-மந்திரி நிதிஷ்குமாரை கடுமையாக சாடினார்.

இதுதொடர்பாக அவர் கூறும்போது, 'பா.ஜனதா கட்சி, கடந்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் பெற்றபோதும் நிதிஷ்குமாருக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் அவரை முதல்-மந்திரியாக்கினோம். ஆனால் திடீரென பல்டியடித்த அவர் காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்டிரீய ஜனதாதளத்துடன் இணைந்து கொண்டார்' என குற்றம் சாட்டினார்.

தற்போது பிரதமராக வேண்டும் என 3 மாதங்களுக்கு ஒரு முறை நிதிஷ்குமார் கனவு காண்பதாக தெரிவித்த அமித்ஷா, இதற்காக வளர்ச்சி சார்ந்த தலைவர் என்ற நிலையில் இருந்து சந்தர்ப்பவாதியாகி விட்டதாகவும், இதற்காக காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளத்தின் நிழலில் ஒதுங்கியிருப்பதாகவும் சாடினார். நிதிஷ்குமாரின் இந்த பிரதமர் கனவு ஒட்டுமொத்த பீகாரையும் சீரழித்து இருப்பதாக கூறிய அமித்ஷா, இதற்காக கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருவதாகவும் தெரிவித்தார். எனினும் 2024-ம் ஆண்டு தேர்தலிலும் பா.ஜனதாவே வெற்றி பெற்று மோடியே மீண்டும் பிரதமராவார் என்றும் அமித்ஷா உறுதிபட தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்