பீகாரில் தனது பெயரை கொண்ட இளைஞரை பார்த்து சிரித்த நிதிஷ்குமார் குறைதீர்ப்பு நிகழ்ச்சியில் ருசிகரம்

அதாவது அந்த இளைஞரின் பெயர் ‘நிதிஷ்குமார் மண்டல்’ ஆகும். இதைப்பார்த்தே அவர் மனம் விட்டு சிரித்தது தெரியவந்தது.

Update: 2023-05-15 19:15 GMT

பாட்னா, 

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஒவ்வொரு மாதத்தின் முதல் 3 திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்ப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அதன்படி நேற்று தனது அலுவலகத்தில் மக்களின் மனுக்களை வாங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதில் மும்முரமாக இருந்தார்.

அப்போது மதுபானியில் இருந்து வந்திருந்த இளைஞர் ஒருவர் கொடுத்த மனுவை படித்தபோது திடீரென பலத்த சத்தத்துடன் சிரித்தார். இதனால் அருகில் நின்ற பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் ஒரு நிமிடம் திகைத்தனர். பின்னர்தான் அவர்களுக்கு விவரம் புரிந்தது.

அதாவது அந்த இளைஞரின் பெயர் 'நிதிஷ்குமார் மண்டல்' ஆகும். இதைப்பார்த்தே அவர் மனம் விட்டு சிரித்தது தெரியவந்தது.

அந்த இளைஞரிடம் நிதிஷ்குமார் சிரித்துக்கொண்டே, 'எனது பெயரை வைத்திருக்கிறாயா?' என கேட்டார். அத்துடன், 'முன்பெல்லாம் எனது பெயரை கொண்ட மற்றொருவரை பார்ப்பது கடினம். ஆனால் தற்போது இந்த பெயர் பிரபலமாகி விட்டது' என கூறினார்.

பின்னர் அந்த இளைஞரின் மனுவை படித்த அவர், ரேஷன் கார்டு பிரச்சினைக்காக வந்திருப்பதை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரியை அவரே தொடர்பு கொண்டு அந்த பிரச்சினைக்கு தீர்வுகாண உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்