இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது - நிதின் கட்கரி

இந்தியாவில் பயோ எத்தனால் வாகனங்களை பயன்படுத்தலாம் என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-08 17:39 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் பயன்பாடு இருக்காது என மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள டாக்டர் பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிரிஷி என்ற வேளாண்மை பல்கலைகழகம் சார்பில் மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது. மாரட்டிய கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி, மத்திய மந்திரிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார்.

அந்த விழாவில் அவர் பேசியதாவது:- இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுகளில் பெட்ரோல் தீர்ந்து விடும். இதனால் நாட்டில் எரிபொருட்களுக்கு தடைவிதிக்கப்படும். மராட்டிய மாநிலத்தில் விதர்பா மாவட்டத்தில் பயோ எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதனை கொண்டு வாகனங்களுக்கு பயன்படுத்தலாம்.

பச்சை ஹைட்ரஜனை ஆழ்துளை கிணற்றில் இருந்து தயாரிக்கலாம். இதனை ஒரு கிலோ 70 ரூபாய்க்கு விற்கலாம். விவசாயிகள் உணவு வழங்குபவர்களாக மட்டுமில்லாமல் எரிசக்தி வழங்குபவர்களாகவும் மாற வேண்டும். விவசாயிகள் கோதுமை, நெல், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை மட்டும் பயிரிடுவதால் தனது எதிர்காலத்தை மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்