ஆந்திராவில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை!

ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.;

Update: 2023-10-02 06:59 GMT

திருப்பதி,

ஆந்திராவில் இன்று காலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆந்திரா முழுவதும் இன்று காலை முதல் ஒரே நேரத்தில் 60- க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

திருப்பதி, கடப்பா, அனந்தபூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களை சேர்ந்த தலைவர்களின் வீடுகள், வக்கீல்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

சோதனையின்போது அதிகாரிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களின் வெளிப்புற கதவுகளை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தினார்கள். சோதனை நடத்தியபோது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்தவர்களை அதிகாரிகள் வெளியே அனுமதிக்கவில்லை.

அதேபோல் வெளியில் இருந்தும் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆந்திர மாநிலம் முழுவதும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்